நாம் அந்த மண்ணில் கூடியிருந்து அழ அனுமதியுங்கள்.. ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது குறித்து பிறகு பேசுவோம்..
இன்று ஒரு கருத்தரங்கிற்காக லண்டனிலிருந்து வந்திருந்த இரு சிங்கள ஆய்வு மாணவிகளை பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன்.
இன்று ஒரு கருத்தரங்கிற்காக லண்டனிலிருந்து வந்திருந்த இரு சிங்கள ஆய்வு மாணவிகளை பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன்.
கருத்தரங்கு தொடர்பான விடயங்கள் பேசி முடிந்ததும் பேச்சு இயல்பாக சிறீலங்கா அரசியலுக்குள் நுழைந்தது.
அங்கு அமைதி பூரணமாக திரும்பியிருப்பதாகவும் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ தயாராக இரு...ப்பதாகவும், தாம் யாழ், வன்னி உட்பட அனைத்து பகுதிகளுக்கும் போய் நேரடியாக இதை அந்த மக்களிடமே கேட்டறிந்ததாகவும் வெளிநாட்டில் இருக்கிற ஆட்கள்தான் பிரச்சினை பண்ணுவதாகவும் இருவரும் ஒரு பெரிய வகுப்பு எடுத்தார்கள்.
நிறைய தரவு பிழைகளுடன் இராணுவ பிடிக்குள் உள்ள மக்களின் கருத்து சுதந்திரம், இனப்படுகொலையை சந்தித்த மக்களின் உளவியல் குறித்த எந்தவித புரிதலுமின்றி தட்டையாக தமது வாதத்தை அடுக்கி கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் வெறுத்து போய், "சரி நடந்ததெல்லாம் இருக்கட்டும். இறுதி போர் என்று கூறப்படுகிற காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் ஒன்றாக கூடி நின்று ஒப்பாரி வைத்து ஓ வென்று அழுவதற்கு உங்கள் அரசு அனுமதிக்குமா?

இன்னும் நாம் அழவில்லை அதாவது உங்களுக்கு தெரியுமா?
ஏனெனில் அதற்கும் நீங்கள் அனுமதிக்கவில்லை. அந்த நாளை கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவுநாளாக அரசு விடுமுறை அளிக்குமா?
தமிழர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அன்று ஆலயங்களில் மணி ஒலிக்கவிட்டு மத வழிபாட்டுக்கு அரசு இடமளிக்குமா?
கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக ஒரு நினைவுத்தூபியை முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் எழுப்ப அரசு அனுமதிக்குமா?
ஒன்று இரண்டல்ல கிட்டத்தட்ட கொல்லப்பட்ட ஊனமுற்ற காணாமல் போக செய்யபட்ட கிட்டத்தட்ட 175000 பேர் ஒரு இனத்திலிருந்து மறைக்கப்பட்ட வரலாறு இது.
தமிழர்கள் அழுவதற்குகூட அனுமதிக்காத தேசத்தில் எப்படி ஐக்கியமாக வாழ முடியும்? அந்த நாளை நீங்கள் வெற்றி நாளாக கொண்டாடும்போதே அந்த இடைவெளி இட்டு நிரப்பமுடியாததாகிவிட்டது.
கூடியிருந்து அழுவதன் உளவியல் உங்களுக்கு தனியாக புரியவைக்க தேவையில்லை. அப்போது இழப்புக்களும் வலிகளும் மனத்திலிருந்து வடியும். மறக்கும் மன்னிக்கும் இயல்பு தோன்றும். இப்போது உங்கள் கேள்விகளுக்கு தலையாட்டும் மக்களின் உளவியல் பேதலித்து போயிருப்பதன எதிர்வினை என்பதை, உளவியல் மாணவிகளான உங்களால் கூட புரியமுடியவில்லையே..
முதலில் மே 18 அன்று நாம் அந்த மண்ணில் கூடியிருந்து அழ அனுமதியுங்கள்.. பிறகு ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது குறித்து பிறகு பேசுவோம் " என்றேன்..
உளவியல் மாணவிகள்தானே விடயத்தை சட்டென்று பிடித்துவிட்டார்கள். கனத்த மௌனம் இருவரிடமும். பிறகு இருவரும் ஒரே குரலில் "sorry" என்றார்கள். பின்பு போகும்போது தமக்குள்ளாகவே "போனமுறை அன்று கோயிலில் மணி அடித்ததற்குதானே ஒரு பூசாரியை இராணுவம் பிடித்ததாக" பேசிக்கொண்டார்கள்.. இனி ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது குறித்து யாருக்கும் வகுப்பெடுக்க மாட்டார்கள்..

-பரணி கிருஷ்ணரஜனி....
No comments:
Post a Comment