தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கூடி அழமட்டுமல்ல வீட்டில் அழக்கூட வழியில்லை.
ஏன் தமிழர்கள் மூச்சுவிடக் கூட சிங்கள இராணுவத்தின் அனுமதியைக் பெற்றாக வேண்டியுள்ளது.
வன்னிக்குள் யாழ்ப்பாணத் தமிழர் போகக் கூடாதாம்.
எங்கள் கடலில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாதாம். தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்களவர் மீன்பிடிக்கலாம்.
வடக்கில் இருந்து ஏதொ ஒரு காரணத்துக்காக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அது தாங்கள் செய்த தவறு
என்று பின்னர் வருத்தம் தெரிவித்தார்கள்.
ஆனால் 1995 ஆம் ஆண்டு இராணுவத்தால் துரத்தப்பட்ட வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 23 கிராம சேவை பிரிவுகளில் வாழ்ந்த 26,281 பேர் (7,273 குடும்பங்கள்) இன்னமும்
தங்களது சொந்த வீடுகளில் மீள் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். அதே சமயம் அரசு சிங்களவர்களை தனது செலவில் கைதடி, நாவற்குழிப் பகுதிகளில்
சகல வசதிகளோடு குடியமர்த்துகிறது. தெரியாமல் கேட்கிறேன். இதற்குப் பெயர் நல்லிணக்கமா?
விடுதலைப் புலிகளது பிடியில் சிக்குண்ட தமிழர்களை மீட்கவே மனிதாபிமான நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அது உண்மையா?
நக்கீரன்
No comments:
Post a Comment