Translate

Monday, 13 February 2012

போர்க்குற்ற சிறப்புத்தூதர் பூசா சிறைச்சாலைக்கு விஜயம் செய்து முன்னாள் புலிகளுடனும் பேச்சு?



அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் அந்நாட்டின் சிறப்புத்தூதுவர் ஸ்டீபன் ராப் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதுடன் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, வெளிவிகார அமைச்சர் ஜிஎல் பீரீஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்துவிட்டு தரைமார்க்கமாக யாழ் சென்று யாழ் அரச அதிகாரிகள் மற்றும் இராணு உயரதிகாரிகளை சந்தித்ததுடன் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.


மேற்படி தரப்பினரை சந்தித்து பெற்ற தகவல்களுடன் நேற்று தென்னிலங்கையின் காலி துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள பூசா தடுப்பு முகாமுக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையிலே இடம்பெற்றபோரில் அப்பாவிகளான மூவினத்தையும் சேர்ந்த மக்களும் இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இறுதிக்கட்ட போரிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளது என்பதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குற்றாவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அதற்கான நடைமுறைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவர் குற்றவாளி என சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி. இந்நிலையில் எவ்வாறு குற்றவாளிகளை இனம்கண்டு தண்டனை வழங்கப்போகின்றார் என்பதும், இதனால் அவர் எதிர்கொள்ளப்போகும் அரசியல் அழுத்தங்களை எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பதும் சாதாரண விடயங்கள் அல்ல. எதுஎவ்வாறாயினும் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியே மக்களும் சர்வதேசமும் எதிர்பார்த்து நிற்பதாகும். அது அரசதரப்பிலிருந்து கிடைக்கப்பெற்றிருக்கின்றது. 


No comments:

Post a Comment