Translate

Monday, 13 February 2012

இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளருக்கு கடிதம் அனுப்பினார் இலங்கைத் தூதர்!


இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளருக்கு கடிதம் அனுப்பினார் இலங்கைத் தூதர்!

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் இன்னசிற்றி பிரஸின் இணையத்தளத்திற்கு செய்திகளை வழங்கும் மெத்தியூ ரசல் லீக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையணிக்கு சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பிலேயே இந்த கடித்தம் எழுதப்பட்டுள்ளது.

மெத்தியூ ரசல் லீ இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை வெளியிடுவதாக இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து சவேந்திர சில்வாயை, அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தூதுவரின் இந்த கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் பான் கீ முனுக்கும் அவரின் பேச்சாளர் மாட்டின் நெசக்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment