ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகச் செயல்ப்பட்டனர் என, 3 இலங்கையர் மீது சிங்களம் கடும் சீற்றம் அடைந்துள்ளது என அறியப்படுகிறது.
மாற்றுக்கொளைகளுக்கான மையத்தின் தலைவர், பாக்கியசோதி சரவணமுத்து, ஆர்வலர் சுனில்லா அபயசேகர, மற்றும் நிமல்கா பெனாண்டோ ஆகியோர் மீதே இலங்கை அரசானது கடும் சீற்றத்தில் உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட இவர்கள் இலங்கை அரசுக்கு எதிரான பல கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு, மகிந்தர் தொடர்பாகவும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனராம்.
இதேவேளை இவர்கள் மூவரும் ஜெனீவா சென்று மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டு, சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளனர் என இலங்கையின் சிங்கள நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையராக இருக்கும் இவர்கள், இலங்கை அரசை விமர்சிப்பது ஒரு தூரோகமாகும் என சில சிங்கள ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவற்றால் இவர்களுக்கு உயிராபத்து வர வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment