Translate

Tuesday, 6 March 2012

ஐ.நா முன்றலில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.


.நா முன்றலில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் 5000 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி நீதிக்காக குரல் எழுப்பியுள்ளனர்.

நேற்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியனாடுகள் சபை முன்பாக அலையெனத் திரண்ட மக்கள் கைகளில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறீலங்கா அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, ஆகியோரின் உருவப் படங்களையும், அவர்களின் வளிநடத்தலில் படுகொலைசெய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தாங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியவறு ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்கக் கோரி ஓங்கிக் குரல் எழுப்பினர்.


இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக தமிழ்ர்கள் அல்லாதோர் அதிகளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தனர். அத்தோடு தொடர்ந்தும் தமிழ்ர்கள் ஜனநாயக முறையில் சர்வதேசத்திற்கு அழுத்தங்கள்ஐக் கொடுக்கவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டனர்.

பெல்ஜியத்தில்இருந்து 30 நாள் தொடர்பயணத்தின் இறுதியாக நேற்று ஐ.நா முன்றலை வந்தடைந்தவர்களை வரவேற்று தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முதலில் தமிழ்ர்களின் விடுதலை வாழ்விற்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் தம்முயிரை தீக்கிரையாக்கிய 20 தியாகப் பேரொளிகளுக்கும் தீபம் ஏற்றப்பட்டு மலர்மாலை அணீவிக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இன்றைய காலத்தின் தேவை அறிந்து சர்வதேசத்திடம் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டியதன் தேவையையும் உணர்ந்த தமிழ்ர்களாக வேறுபாடுகள் எதுவும் இன்றி பெரும்பாலான பல தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்குபற்றியிருந்த்அமை இங்கு குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகள், மற்ரும், உரைகளைத் தொடர்ந்து மாலை 5:20 மணிக்கு தேசியக் கொடி இறக்கப்பட்ட்உ நம்புக்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment