மகிந்த பரம்பரை ஆட்சியில் இருக்கும் வரை தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற சண்டியர் மேர்வினின் வீராப்பிற்கு ஜனாதிபதிக்கு விளக்கம் தெரியவில்லையாம் இதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை நேரில் அழைத்து விசாரணை செய்து விளக்கத்தை பெறுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவரை விசாரணை செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையில் ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை டி.ஏ. ராஜபக்ச பரம்பரை ஆட்சியில் இருக்கும் வரை தன் மீது எவரும் கை வைக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
ஜெனீவா திர்மானத்தினையடுத்து இலங்கை ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கச் சென்று தமது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலை மேற்கொள்கின்றனர். இவர்கள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய கை, கால்கள் முடிக்கப்படும் என சண்டியர் மேவின் சில்வா தெரிவித்திருந்தார்.
அதனைவிட மகிந்த பரம்பரை ஆட்சியில் இருக்கும் வரை தன்னையாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் வீராப்பு பேசியுள்ளார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சவுக்கு சண்டியரின் கூற்றுக்கு விளக்கம் தெரியவில்லையாம் அதனால் மேர்வினிடமே இது குறித்த விளக்கத்தினைக் கேட்டு அறிந்து கொள்ள ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதனால் அந்தப் பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment