இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் இந்தியா தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது என்று ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, ரஷ்யா உள்பட 15 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா எப்படியும் தமக்கு ஆதரவாக வாக்களி்ககும் என்று நம்பியிருந்த ராஜபக்சே பெரும் ஏமாற்றம் அடைந்தார். அதில் இருந்து இந்தியா இப்படி நமக்கு எதிராக வாக்களித்துவிட்டதே என்று புலம்பித் தள்ளுகிறார்.
தலைநகர் கொழும்பில் லங்கா எக்ஸ்போ 2012 வர்த்தக கண்காட்சியை அதிபர் ராஜபக்சே நேற்று திறந்து வைத்தார்.
Read: In English
அப்போது அவர் பேசியதாவது,
Read: In English
அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த தீவிரவாத செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளோம். தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்கவிட மாட்டோம். ஆனால் சில வெளிநாடுகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த கண்காட்சி்ககு வெளிநாட்டவர்கள் வந்துள்ளதில் இருந்தே போலி பிரச்சாரம் எடுபடாது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
அவர் வெளிநாடுகள் என்று இந்தியாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
அவர் வெளிநாடுகள் என்று இந்தியாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment