கனடா “உதயன் விருது” மாவை சேனாதிராஜாவிற்கு! வாழ்த்துக்களைத் தெரிவித்த சக உறுப்பினர்கள்!!
கடந்த மார்ச் 18ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் விழாவில் இலங்கைக்கான சர்வதேச சிறப்பு விருதினைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை வழங்கப்பட்டிருந்தது.
இதனைப் பாராட்டும் முகமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சிறு வைபவம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
கனடா உதயன் விருது விழா நிறுவனர் ஆர்.என். லோகேந்திரலிங்கம் விடுத்த வேண்டுகோளை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு மேற்படி வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மார்ச் 18ம் திகதி நடைபெற்ற மேற்படி விருது விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. எனினும் மாவை. சேனாதிராஜா அதில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாமல் இருந்தமையால் அவருக்குரிய விருது மற்றும் அதனோடு இணைந்த சான்றிதழ்கள் ஆகியவற்றை அவருக்கு நேரடியாக வழங்கும் வைபவம் அங்கு நடைபெற்றது.
உதயன் பிரதம ஆசிரியர் ஆர்.என். லோகேந்திரலிங்கம், வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ. தேவராஜா, கதிர் துரைசிங்கம் ஆகியோர் உட்பட பலர் அங்கு சமுகமளித்திருந்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தமது பல்வேறு பணிகளுக்கும் மத்தியில் அங்கு கலந்து கொண்டதற்கு ஆர்.என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை நிறுவனம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இங்கே காணப்படும் படத்தில் மாவை சேனாதிராஜா அவர்களுக்குரிய சிறப்பு கேடயத்தை லோகேந்திரலிங்கம், வீ.தேவராஜ் ஆகியோர் இணைந்து வழங்குவதையும் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கனடியக் கலைஞர் கதிர் துரைசிங்கம் ஆகியோர் நிற்பதையும் காணலாம்.

No comments:
Post a Comment