திருச்சியில் தமிழர்கள் ஆவேசம் உடனடியாக சிங்கள பேராசிரியர் வெளியேறினர்.
இலங்கையில் உள்ள ஜெயவர்த்தனா பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் ஹேமா மாலினி முனவர்த்தன இன்று (12.3.2012) திருச்சியில் உள்ள பிசப் கீபர் கல்லூரிக்கு வந்தார். அங்கு நடந்த சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.இது தெரிந்ததும் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்லூரி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் போலீசார் கல்லூரிநிர்வாகத்திற்கு முன்னெச்ச ரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கருத்தரங்கை அவசரமாக நிறுத்திவிட்டு, பேராசிரியரை பின் வாசல் வழியாக ரகசியமாக அனுப்பி வைத்தனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 20 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment