சிறிலங்காவில் மனிதஉரிமை பாதுகாவலர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் செகக்யா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் உள்ள மனிதஉரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்புக் குறித்து நான் மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன்.
அவர்களும், அவர்களின் குடும்பங்களும், நண்பர்களும் பதிலடிக்கு உள்ளாகலாம். தற்போதுள்ள சூழ்நிலை இது தான்.
சிறிலங்காவின் தேசிய ஊடகம் மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக விசமத்தனமான பரப்புரைகளை மேற்கொள்வது என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது“ என்றும் அவர் தனது உரையில் குறிபிட்டுள்ளார்.
No comments:
Post a Comment