Translate

Tuesday, 6 March 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஐ.தே.க


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதாக அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் உறுதியளித்துள்ளனர்.
காலத்தைத் தொடர்ந்தும் வீணடிக்காது, பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த மீண்டும் வேறும் குழுக்களை அமைத்து ஆராய வேண்டியது அவசியமில்லை.
பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் அந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளத் தயார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே நாட்டின் ஏனைய எதிர்க்கட்சிகளும் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று விரும்புகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதில்லை – சஜித் பிரேமதாச
கட்சி ஒழுக்க விதிகளை மீறி ஒரு போதும் செயற்பட்டதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதில்லை. ஒழுக்காற்று விசாரணை, அச்சுறுத்தல்கள் மற்றும் சேறு பூசல்களுக்கு அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சஜித் பிரேமதாச செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment