சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்ற இந்தியாவின் முடிவால் தமிழக அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது!!
இன்று இந்தியா பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.கள் குழுவினர் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒத்த கருத்தாக கோரிக்கை வைத்து முழக்கங்களை எழுப்பிய நிலையில் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்துக் கூறிய பிரணாப் முகர்சி சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளதை அடுத்தே தமிழகத்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதுவரை பொறுமை காத்த தமிழகம் இன்று ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரில் நீதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கையில் அதற்கு எதிராக இந்திய அரசு முடிவெடுத்துள்ளதால் கொந்தளித்துப் போயுள்ளது.
இன்று தொலைக்காட்சி விவாதமொன்றில் கருத்துரைத்த இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் த.பாண்டியன் நாங்கள் இந்தியர்களா தமிழர்களா என்பதை தீர்மாணிக்கப் போகும் நாள் வரும் 23ம் திகதிதான். இன்றைய இளைஞர்கள் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கப் போகின்றார்கள். பயங்கரவாதம் தலைதூக்கப் போகின்றது. இதற்கு வித்திட்டது காங்கிரசு அரசு என்றார்.
இது த.பாண்டியன் அவர்களது கருத்து மாத்திரமல்ல தமிழுணர்வும் இனவுணர்வும் மனிதநேயமும் உள்ள ஒவ்வொரு தமிழனதும் நெஞ்சில் நெடுநாளாக உறுத்திக் கொண்டிருக்கும் விடையமாகும். தான் இந்தியனா தமிழனா என்பதை தீர்மானிக்க முடியாது இந்யதியன் என்ற மாயைக்குள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தான்.
முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட போது தடுத்து நிறுத்த வழிதெரியாது தவித்த தமிழகம் இன்று ஜெனீவாவில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட இருப்பதையிட்டு பேரெழுச்சி கொண்டு நிற்கின்றது.
இத்தருணத்திலும் ஈழத்தமிழரிற்கு நீதி கிடைப்பதற்கு இந்தியா தடையாக இருந்தால் தமிழகம் வழமைபோன்று அமைதியாக இருக்காது என்பதை இளைஞர்களது ஆக்ரோசமான கருத்துகளும் செயற்பாடுகளும் உறுதிப்படுத்திநிற்கின்றன.
தமிழகத்து அரசியல் வாதிகள் வேண்டுமானால் கேவலமான அரசியல் சாக்கடைக்குள் இனமானத்தை புதைத்து நிற்கலாம். ஆனால் மானத்தமிழர்கள் இனி ஒருபோதும் காத்திருக்கப் போவதில்லை என்பதனை மிகவிரைவில் உணரலாம்.
ஈழதேசம் இணையத்தளத்திற்காக தமிழக செய்திக்குழு.
No comments:
Post a Comment