இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் கவலையளிக்கின்றன - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தான் எழுதிய கடித்திற்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதில்களும் வராத நிலையில் இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் இந்திய இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் கவலையளிக்கின்றன என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று மீண்டும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களின் முன்பாக இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை மாநாட்டில் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரமதருக்கு தான் எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக தெரிவித்தார்.
இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி இலங்கை அரசு படுகொலை செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரiணையை நடத்த வேண்டும் என்றும் இந்தியா பொருளாதார உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானங்களை ஏகமனதோடு நிறைவேற்றியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சிங்களவர்களுக்கு நிகராக ஈழத் தமிழர்களுக்கும் அரசியல் உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தான் பிரதமரிடம் நேரில் கேட்டக் கொண்டதையும் நினைவுபடுத்திய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதங்களின் விபரங்கள் அனைத்தையும் இன்று நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment