
ஆனால் அவர் மக்களை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்துள்ளார் எனத் தெரிவித்துள்ள கருணா, தாமே பொலிசாரிடம் சொல்லி வசந்தனைக் கைதுசெய்யச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில் வசந்தன் தனது இணைப்புச் செயலாளர் இல்லை என்றும் அவரை எனக்குத் தெரியாது என்றும் சொல்லிய கருணா, பின்னர் தானே பொலிசிடம் புகார் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டாரே இது எப்படி ? நாட்டில் எவ்வளவோ கொலை கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடையாளம் காணப்பட்ட பல ஆசாமிகள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் காட்டிக்கொடுக்காத கருணா வசந்தனை மட்டும் ஏன் காட்டிக்கொடுக்கவேண்டும் என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றன அல்லவா ?
அது சரி காட்டிக்கொடுப்பதில் பி.எச்.டி(டாக்டர்) பட்டம் வாங்கிய ஆள் ஆச்சே கருணா ! அதுமட்டுமா இணையங்கள் தவறான செய்திகளைப் பிரசுரிப்பதாகவும் இவர் சாடியுள்ளார். ஒரு விடையத்தை முற்றாக அறிந்தபின்னர் தான் எழுதவேண்டும் எனவும் அவர் தமிழ் இணையங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் என்றால் பாருங்களேன்.
No comments:
Post a Comment