Translate

Tuesday, 6 March 2012

உயர்நிலைக்கல்லூரி மாணவர்களுடனான தமிழர் நடுவப் பிரதிநிதி சந்திப்பு.


photo.JPG
நோர்மன்டி சமூகவியலுக்கான உயர்நிலைக் கல்லூரியில், இன்று நடந்த சந்திப்பில், தமிழீழ மக்களின் தற்போதைய சமூக அரசியல் நிலைமைகள் குறித்து அறியும் ஆர்வத்தில் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டனர். 


உயர்நிலைக்கல்லூரி மாணவர்களுடனான தமிழர் நடுவப் பிரதிநிதி சந்திப்பு. 


நோர்மன்டி சொலிதாரித்தே தமிழீழம் ( Solidarité Tamil Eelam ) என்ற பிரெஞ்சு அமைப்பினால், ஒழுங்குசெய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், தமிழர் நடுவ பிரதிநிதியும், இறுதிக்கட்டப் போரில், மக்களின் அவலங்களை நேரில், பார்த்து, இந்நெருக்கடியை நேரில் அனுபவித்து தப்பி வந்தவருமான, தமிழரசன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தார். 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், தமிழர் பகுதி இருந்தபோது, பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமை சுதந்திரம் எவ்வாறு பேணப்பட்டது என்பதை அறியும் ஆவலில், பலதரப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை, சிறீலங்காவின் ஆட்சியில் பெண்கள் குழந்தைகளின் நிலைமைகள் குறித்து அறிவதிலும் மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டினர். 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை, ஆரம்பமுதல், தற்போதைய காலம் வரை எடுத்துவிளக்கிய தமிழரசன், தற்பேபாது அங்குள்ள மக்களின் நிர்க்கதி நிலை குறித்தும் எடுத்து விளக்கினார். 
சுமார் மூன்று மணிநேரமாக இக்கலந்துரையாடல் ஆக்கபூர்வமாகத் தொடர்ந்தது. 
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைச் சபையில், சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற பிரெஞ்சு மாணவ சமூகம் உதவவேண்டும் என, இச்சந்திப்பின்போது தமிழரசன் வேண்டுகோள் விடுத்தார். 

இக்கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசுகள் மேற்கொண்டுவந்த இனப்படுகொலைகளின் தொகுப்புக்கள் அடிங்கிய இறுவெட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 
இத்துடன், நாடகடந்த தமிழீழ அரசினால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட, இனப்படுகொலை வரலாறு அடங்கிய ஆவணமும் அங்கு சமூகமளித்தோருக்கு வழங்கப்பட்டது. 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர்நடுவம் - பிரான்ஸ்

No comments:

Post a Comment