http://www.thinakkathir.com/?p=31999
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு தெரியாமல் அறிக்கை விடுவதற்கோ, என்னை கண்டிப்பதற்கோ கனடாவில் உள்ள தங்கவேலுக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்ததலைவர்களில் ஒருவரான எனக்கு கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளை இருப்பதாக தெரியாது. கனடா தங்கவேலு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக வெளியிட்ட அறிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் தீய எண்ணம் கொண்டதாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவா விஜயம் தொடர்பாக எழுந்த பிரச்சினைக்கு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் நக்கீரன் என்றழைக்கப்படும் தங்கவேல் சுரேஷ் பிரேமச்சந்திரனைக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
ஜெனிவா போவது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளைத் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் திரு. தங்கவேல் என்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர் சம்பந்தன்மீது தான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நான் கட்சி(!)க்கட்டுப்பாட்டை மீறியதால் என்னை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையானது பல இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதால் இதற்கான பதிலைக் கூற நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
முதலாவதாக கனாடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு கிளை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களோ அல்லது கனடாகிளை (இருந்தால்) யின் உத்தியோகத்தர்களோ அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு அறிவிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுள் ஒருவராக நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டிருந்தும் கூட, உங்கள் கிளையின் திட்டங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை என்னுடன் நீங்கள் தொடர்புகொண்டது கிடையாது.
தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தனக்குத் தேiவான பல்வேறுபட்ட பிரிவுகளையும் அதற்குப் பொறுப்பான ஆளணிகளையும் கொண்ட ஒரு ஸ்தாபனம் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே ஒரு கூட்டமைப்பின் நெறிமுறை தர்மம் (நுவாiஉள) என்ற அடிப்படையிலும் உய்த்தறிவின் அடிப்படையிலும் தாயமைப்பு என்ற வகையில் இங்கு என்னுடனும் நீங்கள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கும் எனக்கும் கூட்டமைப்பு என்ற ரீதியில் இவ்வறிக்கைக்கு முன்புவரை எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
மேலும் பொறுப்புள்ள மனிதராக உங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள், இப்பிரச்சினை தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவதற்கு முன்பாக உண்மைகள், யதார்த்தங்கள் மற்றும் எத்தகைய சூழ்நிலையில் நான் பிபிசி மற்றும் கனேடிய தமிழ் வானொலிகளுக்கு செவ்வியளித்தேன் என்பதை என்னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கட்சிக்கிளையின்(?) தலைவர் என்ற அடிப்படையில் உங்களது கருத்துக்கள் அல்லது கிளையின் தீர்மானங்கள் ஆகியவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்பதுடன், எந்தத் தலைவர்களையும் கண்டித்து அறிக்கை விடுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்கள் பார்வையின்படி எனது செவ்வியானது கட்சி(!)யின் சட்டதிட்டங்களை மீறியதாக நீங்கள் கூறுவீர்களாயின், உங்களது அறிக்கையானது கட்சியின் சட்டதிட்டங்களை மோசமாகமீறிய செயல் என்பதை உணர்கின்றீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக கட்சிக்கட்டுப்பாடு என்பது ஒரு சிலருக்கானது அல்ல. மாறாக, அது கட்சியிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. இதில் தலைவர் முதல் தொண்டர்வரை அனைவரும் உள்ளடக்கம்.
கூட்டமைப்பின் தலைவர்களுடனோ, அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காமல், திருவாளர்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரால் எடுக்கப்பட்ட முடிவே இக்குழப்பத்திற்கு மூலகாரணமாகும். உண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ விஜயமாக நான் சென்னையில் இருந்தபொழுது, இவர்கள் ஒரு அறிக்கையைத் தயாரித்ததன் பின்னர், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளோம் எனவும், இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தொலைபேசி மூலம் சுமந்திரன் எனக்குக் கூறினார். அந்த சமயத்தில் அவசரப்பட்டு அறிக்கை வெளியிட வேண்டாம் எனவும் மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சுமார் ஒருமாதகாலம் தொடர்ந்து நடைபெறவிருப்பதால் எமக்குப் போதிய கால அவகாசம் இருக்கின்றதெனவும் எனவே இதுதொடர்பாகக் கலந்துரையாடி முடிவெடுக்க பாராளுமன்ற குழு கூட்டத்தைக் கூட்டுமாறும் வேண்டுகோள் விடுத்தேன்.
அவ்வேளையில் தமிழ்நாட்டில் இருந்த செல்வம் அடைக்கலநாதனும் சுமந்திரனைத் தொடர்புகொண்டு இதேகருத்தை முன்வைத்தார். திரு. மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இதுவிடயம் தொடர்பாக எதுவுமே கூறப்படவில்லை. இந்தக் கருத்துக்கள் எதுவுமே கவனத்தில் எடுக்கப்படாமல் திரு. சம்பந்தன் அவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. கட்சிக்கட்டுப்பாடு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளைப் பற்றிப் பேசும் நீங்கள் திரு.சம்பந்தன் அவர்களின் இந்நடவடிக்கை குறித்து எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளீர்கள்?
ஜெனிவாவிற்குப் போவது போகாததை ஒருபுறம் வைத்துவிட்டு, ஜெனிவா செல்ல மாட்டோம் என்று அறிக்கை விட்டதற்கு என்ன காரணம் என்று இதுவரை நீங்கள் கேட்டீர்களா? இவ்வாறான அறிக்கையினால் தமிழ் மக்களுக்கோ அல்லது கூட்டமைப்பிற்கோ எத்தகைய பயன் ஏற்பட்டது? மாறாக, இவ்வறிக்கை சகல சிங்களத் தலைவர்களாலும் அவர்களது அடிவருடிகளாலும் வரவேற்கப்பட்டதுடன் அரசாங்கம் இதனைத் தனக்குச் சாதகமாக ஜெனிவாவிலும் பயன்படுத்திக்கொண்டது. இப்படிப்பட்ட ஒரு அறிக்கை இந்தக்காலகட்டத்தில் வெளியிடுவது அவசியம்தானா? ஜெனிவாவிற்குப் போகாவிட்டால் மௌனமாக இருந்திருக்கலாம். அறிக்கை வெளியிட்டு அரசிற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தவறுகள் விட்டால் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அப்பொழுதுதான் திருந்த முடியும். அதனை நியாயப்படுத்த முயற்சித்தால் தொடர்ந்தும் தவறுகள் செய்துகொண்டே இருப்போம்.
உங்களின் நலனுக்காக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நான் மனதார வரவேற்கின்றேன். எனினும் கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவர் என்ற அடிப்படையில், உங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எந்தவொரு தலைவர் மீதோ அல்லது கொள்கை மீதோ, அல்லது கோட்பாட்டின் மீதோ கண்மூடித்தனமான நம்பிக்கையை வைதத்திருப்பது என்பது நீங்கள் வகிக்கும் பதவிக்கும் உங்களது நற்பெயருக்கும் களங்கத்தை உருவாக்கலாம். விமர்சன ரீதியான பார்வை ஊடாகவும், பகுப்பாய்வு மூலமான முடிவுகளின் ஊடாகவும் ஒரு நபரிலோ, கொள்கையிலோ அல்லது கோட்பாட்டிலோ நம்பிக்கை வையுங்கள். அது மட்டுமன்றி, மாற்றங்களுக்கேற்ப, உங்களது கருத்துக்களையும் செழுமைப்படுத்துங்கள்.
இறுதியாக, நீங்கள் விட்ட தவறுகளை இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் என்பதுடன், நீங்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் என்னைக் கண்டித்ததை மீளப்பெறுவீர்களாயின், நீங்கள் இழந்த மதிப்பையும் மீளப்பெறுவீர்கள். நீங்கள் வெளியிட்ட இவ்வறிக்கையானது புலத்திலும் களத்திலும் பல தமிழ் மக்களைச் சென்றடைந்துள்ளதால் உங்களுக்கு நான் பகிரங்கமாகப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது.
வாழ்த்துக்களுடன்,
சுரேஷ் க. பிரேமச்சந்திரன்.
யாழ் பாராளுமன்ற உறுப்பினர்,
உத்தியோகபூர்வ பேச்சாளர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

No comments:
Post a Comment