Translate

Wednesday, 7 March 2012

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் சபை பொறுப்புடன் செயலாற்றும் என நம்புகின்றோம்-பிரதமர் தமிழீழ

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் சபை பொறுப்புடன் செயலாற்றும் என நம்புகின்றோம்-பிரதமர் தமிழீழம் 

இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நாதம் ஊடகசேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்...
அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவினை அங்கத்துவ நாடுகள் பலப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முடியும்.
சிறிலங்கா அரசானது, குறித்த இந்த பிரேரணை வரைவினை, பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும். இந்நிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றினை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையின் வரைவில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்கின்றோம்.
இதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கென இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த பிரேரணை தொடர்பில், சபை பொறுப்புடன் ஆற்றும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment