ஆட்டம் கண்டது ஈ.பி.டி.பியின் கோட்டை! இனியாவது திருந்துவார்களா மக்கள்?
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி எனப்படும் ஈபிடிபியினர் தமது கோட்டையாக ஆதிக்கம் செலுத்தி வந்த நெடுந்தீவில் இருந்து முற்றாக செல்வாக்கு இழக்கும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சிறுமி லக்சினியை கொலை செய்த சம்பவத்தின் பொழுது நெடுந்தீவு மக்கள் ஈபிடீபி உறுப்பினர்மீது குற்றம்சாட்டி அவரை கைது செய்ய வேண்டும் என்று கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவியும் 13 வயதைக் கொண்ட சிறுமியுமான லக்சினியை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற ஈபிடிபி உறுப்பினருக்கு தகுந்த தண்டணையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஈபிடிபி உறுப்பினருக்கு எதிரான சுலோக்களை ஏந்தியவாறு வைத்தியசாலை முன்பாகவும் பொலிஸ்நிலையம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்........... read more
|
No comments:
Post a Comment