தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அனுசரணையில் நிறுவப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் கொக்குவிலில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்குட்பட்டோருக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் நிறுவப்பட்ட இத் தொழிற்பயிற்சி நிலையத்தை இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரின் பாரியார் திருமதி சரவணபவன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் நந்தகுமாரும் கலந்துகொண்டனர். பயிற்சித் திட்ட இணைப்பாளர்களான செ.செல்வராசா, க.ஜோதி முருகேசு மற்றும் அர்ச்சுனா சிறுவர் இதழின் ஆசிரியர் சி.மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இத் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தையல் பயிற்சி,ஆடை தயாரித்தல், கணணிக் கற்கை என்பன வழங்கப்படவுள்ளது. அத்துடன், இத் துறைகளில் டிப்ளோமா முதல் பட்டப்படிப்பு வரை செல்வதற்கான வழிகாட்டல் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இத் தொழிற்பயிற்சி நலையத்திற்கான தையல் இயந்திரங்கள், கணணி, மற்றும் தளபாடங்கள் என்பன நாடாளுமன்ற உறுப்பினரினால் வழங்கப்பட்டது. அத்துடன் இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பதற்கு மாணவர்களிடம் கட்டணங்கள் எதுவும் அறவிடப்பமாட்டாது. என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment