Translate

Monday, 19 March 2012

தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு வெற்றி! இலங்கைக்கு எதிரான தீர்மானம் மத்திய அரசு ஆதரவு!


புதுடில்லி, மார்ச்.19- அய்.நா. அவையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. 


இந்தத் தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23- ஆம் தேதி) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கையை தண்டிக்க வேண்டுமானால் அய்.நா அவையில் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அ.தி.மு.க., தி.மு.க. உள்பட எல்லா தமிழக கட்சிகளும் இந்த பிரச்சினையில் ஓரணியில் திரண்டுள்ளதால் மத்திய அரசு தவிப்புக்குள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்தான கேள்வி நேரத்தில் பேசுகையில்,

தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாத கிடைக்க இந்தியா பாடுபடும்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும். என்று கூறினார்.

No comments:

Post a Comment