Translate

Friday, 16 March 2012

"சீனாவில் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை"


சீன நாடாளுமன்றத்தில் வென் ஜியா போ
சீனாவில் மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அதன் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
தமது நாடு பெற்று வரும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்க இந்தச் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவ முறையும், நாட்டின் தலைமை முறையும் மாற வேண்டும் என வென் ஜியா போ கூறியுள்ளார்.
அப்படியான சீர்திருத்தம் ஏற்படாவிட்டால், 1960 களில் கலாச்சாரப் புரட்சியால் ஏற்பட்ட துயரம் மீண்டும் ஏற்படும் அபயாம் உள்ளது என்றும் வென் அவர்கள் எச்சரித்துள்ளார்.
சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டத் தொடரின் முடிவில் உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை தெரிவித்த வென் ஜியா போ, தான் பதவியில் இருந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக மன்னிப்பு கோரினார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனா தனது புதிய அரசியல் தலைமையை தேர்தெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

No comments:

Post a Comment