Translate

Sunday, 1 April 2012

வட மாகாணத்தில் 2,087 சிறார்கள் தமது தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர்.

வட மாகாணத்தில் 2,087 சிறார்கள் தமது தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர். 10,404 சிறார்கள் தாய் அல்லது தந்தை ஆகிய ஒருவரை இழந்த நிலையில் உள்ளனர். இந்தச் சிறார்களில் 10,878 சிறார்கள் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். அரச மற்றும் தனியார் இல்லங்களில் 1,613 சிறார்கள் தங்கியுள்ளனர் என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கையே இவை என அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்துள்ளார்.


பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் யாழ்ப்பாணச் சிறுவர் இல்லங்களில் 127 பேரும், வவுனியா சிறுவர் இல்லங்களில் 120 பேரும், மன்னார் சிறுவர் இல்லங்களில் 99 பேரும், கிளிநொச்சி சிறுவர் இல்லங்களில் 31 பேரும் தங்கியுள்ளனர்.

பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் 413 பேரும், வவுனியாவில் 360 பேரும், முல்லைத்தீவில் 357 பேரும், கிளிநொச்சியில் 334 பேரும், மன்னாரில் 205 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்...

No comments:

Post a Comment