Translate

Monday 9 April 2012

செருப்படி வாங்கிய மகிந்த..


செருப்படி வாங்கிய மகிந்த..
மட்டகளப்பில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஜனாதிபதி மகிந்தவின் உருவப் பொம்மைக்குப் பொதுமக்கள் செருப்படி கொடுத்துள்ளனர்.

விழுப்புரத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் “காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு சிறிலங்கா அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசே கண்டனம் தெரிவி“ என்ற பதாகையுடன், ஒருவர் சிறிலங்கா அதிபரின் உருவபொம்மையை கயிற்றில் கட்டி, காந்தி பஜார் வழியாக இழுத்து வந்தார்.

செஞ்சி கூட் வீதிக்கு வந்ததும் உருவபொம்மையுடன் அவர் மறியல் செய்ய முயன்றார்.

இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் சிறிலங்கா அதிபரின் உருவபொம்மைக்கு செருப்பால் அடித்து தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

அதற்குள் அங்கு வந்த தமிழ்நாட்டுக் காவல்துறையினர் உருவபொம்மையை இழுத்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர் கட்டி இழுத்து வந்த சிறிலங்கா அதிபரின் உருவபொம்மையையும் அவர்கள் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

No comments:

Post a Comment