தமிழ்த் திரைப்படங்களிற்கு உலகளவில் விருதுகளை வழங்கும் ஒரே இடமாக நோர்வே தமிழ் திரைப்பட விழா நடைபெற்றுவருகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்படும் நல்லிரவு சூரியன் விருதிற்கான படத்தை தெரிவு செய்யுங்கள் உறவுகளோ.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ்ப்படங்களில் இருந்து விருதிற்கு விண்ணப்பிக்கப்படும் படங்களில் பதினைந்து படங்களைத் தெரிவு செய்து அவற்றில் இருந்து சிறந்த படத்தை தெரிவு செய்து விருதுவழங்குவது வழக்கம்.
அவ்வாறு இந்த ஆண்டிற்கான விருதிற்கு சிங்கள கொலைவெறிப்படைகளின் பாலியல் வெறியாட்டத்தையும் அதன் விளைவுகள் எப்படி தமிழினத்தின் ஆன்மாவை கசக்கிப் பிழிகின்றது என்பதையும் திரைக்காவியமாக வெளிப்படுத்தும் உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியம் உள்ளிட்ட பதினைந்து படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் பங்களிப்பு இந்த பதினைந்து திரைப்படங்களில் எது சிறந்த தமிழ்ப்படமாக தெரிவு செய்வதுதான். நாட்கள் குறைவாக உள்ளன. வரும் 29ம் திகதி விருது அறிவிக்கப்பட இருக்கின்றது. அதற்கு முன்னர் உங்கள் வாக்குகளை செலுத்தி சிறந்த படைப்பிற்கு உலக அங்கீகாரம் பெறுவதற்கு வழித்துணையாக இருங்கள்.
கீழே உள்ள இணைப்பில் சொடுக்கி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும்.
http://www.facebook.com/ntff.no
ஈழதேசம் இணையம்.
No comments:
Post a Comment