அவர்களின் அமைதி தான் தமிழீழத்தில் 64 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் இனப்படுகொலைக்கு காரணம்!
அதை பிரித்தானிய அரசிடம் வலியுறுத்துவோம்.

பிரித்தானிய தூதராலயத்திட்கு அருகாமையில் ஒன்றுகூடல்

தமிழினத்தின் இனப்படுகொலையை பார்த்தும் அமைதி காக்கும் பிரித்தானிய அரசிடம் அமைதி காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விகேட்டு ஒன்றுகூடல் பிரித்தானிய தூதரகத்திட்கு அருகாமையில் ஏப்ரல் 25 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படுகிறது.


1833 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை 3 ராஜ்யங்கள் கொண்ட நாடாக எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழும் நாடாக இருந்தது. ஆங்கிலேய காலனித்துவத்திற்கு முன் சுதந்திர இனங்கள் ஆக வாழ்ந்த நாட்டை ஒரே ராஜ்ஜியத்திட்குள் கொண்டு வந்து அதன்பின் டோநோமூர் யாப்பில் தமிழ் மக்களை தேசிய இனமற்றவர்களாக்கி சொல்புரி யாப்பின் மூலம் சிங்கள அரசிடம் தமிழர்களின் உரிமைகளை கையளித்து விட்டு சென்று விட்டனர்.

தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாக்கிவிட்டு சென்ற பிரித்தானியா அன்று தொடக்கம் இன்று வரை நடை பெற்று வரும் இனப்படுகொலைக்கு மூல காரணமாக இருக்கிறது.

காலனித்துவ ஆட்சியினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமாக இலங்கை (சிறி லங்கா) இன்று நிற்கிறது.

தமிழீழத்தில் 64 வருடங்களாக ஒரு இனம் படுகொலை செய்யப்பட்டு கொண்டிருகிறது, அங்கே நடக்கும் இனப்படுகொலைக்கும் பிரித்தானியாவிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை போன்று அமைதி காத்து கொண்டிருக்கிறது பிரித்தானியா.

காலனித்துவ காலத்தில் ஆகட்டும், இலங்கை மகாராணிக்கு கீழ்  இருந்த காலத்தில் ஆகட்டும், காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பில் அங்கத்துவ நாடாக இருக்கும் காலத்தில் ஆகட்டும், இன்று முள்ளிவாய்க்காலில் 40,000க்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்த சிறி லங்கா அரசை   காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பில் வைத்திருப்பது சிறி லங்காவின் இனப்படுகொலைகளை ஆதரிப்பது போல் இருக்கிறது.

ஆகவே, காலனித்துவ ஆட்சியாளர் என்ற அடிப்படையில் பிரித்தானிய அரசுக்கும், பிரித்தானிய அரசிக்கும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் காலம் கடந்தாலும் இன்றும் அவர்களுக்கு முக்கிய கடமை, தமது கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழர்களின் கையில் அவர்களில் வாழ்வுரிமைகளை மீள் அளிப்பதில் பிரித்தானியா முக்கிய பங்கு அழிக்க வேண்டும், அதே நேரத்தில் குற்றவாளி நாடாகிய சிறி லங்காவை இருந்து வெளியேற்ற வேண்டிய கடமையும் பிரித்தானியாவிடம் உள்ளது.

தமிழீழ உறவுகளே! ஒன்று கூடுவோம் நாம் அனைவரும், பிரித்தானிய தூதரகத்திட்கு அருகாமையில்.

“ஓங்கி ஒலிக்கும் எம்மவர்களின் ஒவ்வொரு குரலும் எம் இனத்தை அழிவுக்கு உட்படுத்தியவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்”

காலம்: 25 ஏப்ரல் 2012

இடம்: Eglise de Madeline

நேரம்: மாலை 3 மணிக்கு

மெட்ரோ: Madeline (Metro ligne 12-14-8)