Translate

Sunday, 22 April 2012

பவுசியாவைக் கொன்றது பல்கலைக்கழகமா


பவுசியாவைக் கொன்றது பல்கலைக்கழகமா? 
கடந்த வாரம் எமது பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையைச் சேர்ந்த மாணவியும் முன்னாள் போராளியுமான பவுசியாவின் சாவு தொடர்பில்www.newjaffna.com என்ற இணையதளம் "முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?" என்ற தலைப்பில் தனது வழக்கமான பூசிமெழுகல்களோடு ஓர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள ஊடக அறத்தோடுகூடிய பொருத்தப்பாட்டு த்தன்மைகள் குறித்து எனது பார்வையைப் பதிகிறேன். மஹா பாரதத்தில் தோன்றும் மாபெரும் வீரனும் ஈடு இணையற்ற கொடையாளனுமான கர்ணன் என்பான் இறுதியுத்தத்தில் அருச்சுணனின் அம்புகளிற்கு பலியானான். தர்மதேவதை தன்பிள்ளை இழப்பை எண்ணி வருந்தியபோது கிருஷ்ணன் கூறுகிறான், "கர்ணனைக்கொன்றத ு அருச்சுணனில்லை, அவன் ஏற்கனவே பலரால் கொல்லப்பட்டுவிட ்டான்.

 தன்னிடம் தான் ஓர் ஷத்திரியன் என்பதை மறைத்து வில்வித்தை கற்றான் என்பதற்காக தான் கொடுத்த கலையினைச் செயலற்றுப்போகச்செய்த பலராமன் கொன்றான்; கர்ணனின் உயிர்காக்கும் கவச குண்டலங்களை இரந்த இந்திரன் கொன்றான்; அதி சக்திவாய்ந்த நாகாஸ்திரத்தை 

ஒருகணைக்குமேல் மறுகணை தொடுக்காதே எனக்கேட்ட குந்திதேவி கொன்றாள்; கடைசிநேரத்தில் அவன் தேர்ச்சில்லு குழியினுள் மாட்டுப்பட்ட போது அதை எடுக்க உதவிசெய்யாத சல்லியன் கொன்றான்.

 இத்தனைபேர் கொன்ற பின் அருச்சுணன் ஓர் செத்த பாம்பையே அடித்துள்ளான்." என கிருஷ்ணன் எடுத்துரைக்கிறான் பாரதத்தில். 

அதுபோலவே இம் மாணவியின் சாவிற்கும் பல்கலைக்கழகம் மட்டும்தான் காரணமென்பது தவறு. அதை ஏற்கவும் முடியாது. பல்கலைக்கழகம் என்பது மாணவர்களையும் தன்னகத்தே கொண்டது. பல சங்கங்களைக்கொண்டது. அப்படியாயின் அக்கொலையில் மாணவர்களும் உடந்தையா? 

  • அம்மாணவியை ஏற்கனவே கொடிய போர் கொன்றுவிட்டது; 
  • போரை இடைவெளியின்றி ஈனத்தனமாக நடாத்திய இலங்கை ஆழுந்தரப்பு கொன்றுவிட்டது; 
  • பல்கலைக்கழக விடுதியிலிருந்த ு வெளியேற்றிய நிர்வாகம் கொன்றுவிட்டது; 
  • அவளை இளமையில் வாட்டிய வறுமை கொன்றுவிட்டது; 
  • அவளைப்பொறுப்பேற்ற உறவினரின் அவள்மீதான ஈடுபாடற்ற தன்மை கொன்றுவிட்டது; 
  • அதன்பின்பு அவள்மீது உறவினர் வெறுப்பாயுள்ளனர் என்பதை அவளிடம் தெரிவித்த அயலவர் கொன்றுவிட்டனர்; 

இத்தனைக்குபின்பும் பல்கலைக்கழகம்தா ன் காரணமென ஒட்டுமொத்த பழியையும் யாழ்.பல்கலைக்கழகத்தின்மேல் போடுவது ஏற்கத்தக்கதன்று. ஒன்றைச்சிந்தியுங்கள் பல்கலைக்கழகத்தால் அம்மாணவிக்கு நான்குவருடங்கள்தான் உதவிகள் செய்யமுடியும். அதன்பின்பு அம்மாணவியின் வாழ்க்கை நிலை என்னாவது? 

இடையில் தோன்றிமறையும் பல்கலைக்கழக வாழ்க்கையை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக ஒருதரப்பை மட்டும் ஏன் சாடுகிறீர்கள். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமும் அவளது உளவுரன் உடைவிற்கு காரணமென்பது மறுக்கமுடியாது. 

அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் விழுந்தபாட்டிற்கு குறிசுடுவதையே சில ஊடகங்கள் தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இது ஓர் ஊடகத்தின் ஒழுக்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 V.Shanmugarajah, Mediastudies, University of Jaffna.

No comments:

Post a Comment