Translate

Sunday, 22 April 2012

கொழும்பில் -ஐநாவுக்கே தெரியாத சுஸ்மா சொன்ன ரகசியம், !


கொழும்பில் -ஐநாவுக்கே தெரியாத சுஸ்மா சொன்ன ரகசியம், !


சரி. கேள்வி என்ன? “சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையில், இந்தியா ஏன் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது?”
 
இலங்கையில் வைத்து, இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார், இந்திய எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஸ்மா ஸ்வராஜ்.
 
சுஸ்மா ஸ்வராஜ்
 
இலங்கை அரசியல்வாதிகளையே தலைசுற்ற வைக்கக்கூடிய அவரது பதில், – “அந்த தீர்மானம், இலங்கைக்கு எதிரானது அல்ல என்று புரிந்து கொண்டே இந்தியா வாக்களித்தது”
 
அடேங்கப்பா!
 
ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், தமக்கு எதிரானது என்று இலங்கை அரசு பல தடவைகள் கூறிவிட்டது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காக, இலங்கை வெளியுறவு அமைச்சர் நாடு நாடாகச் சென்று ஆதரவு திரட்டினார்.
 
அமெரிக்க தீர்மானம் தமக்கு எதிரானது என்று கூறிய இலங்கை அரசு, அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்று இந்தியாவிடமும் கேட்டுக்கொண்டது.
 
அதையும் மீறி, தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அதன் மற்றொரு அர்த்தம், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
 
அதே தீர்மானத்தைப் பற்றித்தான் இந்திய எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஸ்மா ஸ்வராஜ், கொழும்பில் கருத்து தெரிவித்திருந்தார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்மான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக எதுவும் இல்லை.
 
எப்படியென்றால், அந்த தீர்மானம் LLRC (Lessons Learnt and reconciliation Commission) ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது.
 
இந்த LLRC ஆணைக்குழு இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டது. அதாவது, இலங்கையின் சொந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமல்படுத்தும்படியே ஐ.நா. மனித உரிமை தீர்மானம் கூறுகின்றது. எனவே இத்தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. அதை தெரிந்து கொண்டதால் நாம் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டோம்” என்று விளக்கினார் அவர்.
 
அடடா.. இவரின் விளக்கத்தை இலங்கை அரசு முன்கூட்டியே கேட்டு வைத்திருந்தால், ஜெனீவாவில் சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லையே!

No comments:

Post a Comment