Translate

Sunday 22 April 2012

இந்தியக் குழுவின் பயணத்தில் திருப்தி இல்லை: டில்லி பேராசிரியர்


இந்தியக் குழுவின் பயணத்தில் திருப்தி இல்லை: டில்லி பேராசிரியர்
சிறிலங்காவிற்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயண முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என டில்லி பல்கலைக்கழக அரசியல் பிரிவு தெற்காசிய விவகாரங்களுக்கான பேராசிரியர் சகாதேவன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.'

ஈழத்தமிழர்களுக்கு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும் அவர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எதைச் சொன்னார்களோ அதனையே திரும்ப திரும்ப சொல்கின்றார்கள் ஆனால் எதுவுமே நடந்தபாடில்லை.

சிறிலங்கா சென்ற இந்தியக்குழுவினரும் சிறிலங்கா எதைக்கூறினார்களோ அதனையே செய்யுங்கள் எனக்கூறி வந்துள்ளார்கள். அதாவது நல்லிணக்கம், ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு,பதின் மூன்றாவது சீர்திருத்தம் என கூறியுள்ளனர். இது காலம் காலமாக சிறிலங்கா ஆட்சியாளர்கள் கூறிவருவதுதான். அதனைத்தான் திரும்பவும் சுட்டிக்காட்டியதாக கூறுகின்றார்கள் இந்தியக்குழு. அதாவது அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை.

மறுவளமாக ஈழத்தமிழர்கள் மற்றும் அதன் தலைமைக்கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறும் கருத்துக்களை இந்திய அரசோ அல்லது இந்தியக் கட்சிகளோ மிகவும் ஆழமாக பார்க்கவில்லை. சீரியஸ் ஆக எடுக்கவில்லை.

அவர்களின் கருத்துக்கு இந்தியக் குழுவோ இந்திய அரசோ சமமான நிறையினைக் கொடுக்கவில்லை. மாறாக சிறிலங்கா அரசாங்கம் எதனைக் கூறுகின்றதோ அதனை வைத்தே மதிப்பீடுகளையும் அறிக்கைகளையும் விடுகின்றார்கள். அதாவது இந்தியக்குழுவின் பயணம் வழமையானதொன்றுதான். இவ்வாறு கூறியுள்ளார் சகாதேவன்.

No comments:

Post a Comment