பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் யாழ். ஆயருடன் சந்திப்பு
03 April, 2012 by admin
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பீ.சி. லோட் நெசபி இன்று செவ்வாய்கிழமை யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். அரசியல் குறித்த மக்களின் எதிர்ப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை, அபிருத்தி, சுகாதாரம் மிதிவெடியகற்றல் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆயருடன் உரையாடி ஆராய்ந்தார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விதவைகளின் வாழ்வதார அபிவிருத்தி, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment