Translate

Tuesday 3 April 2012

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-


காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வியை தழுவியுள்ளது. வட-கிழக்கில் காணாமல் போனவர்களது எண்ணிக்கை தொடர்பான உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இன்று வரை எவரிடமும் இல்லாதேயுள்ளது. 

குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் 1998ம் ஆண்டின் பின்னர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 
எனினும் இலங்கை அரசோ அதனை மறுதலித்தே வருகின்றது. இந்நிலையில் காணாமல் போனவர்களது குடும்பங்கள் குறித்த கால எல்லயின் பின்னர் மரண சான்றிதழ்களை கோரி பெற்றுக்கொள்ளலாமென அரசு அறிவித்திருந்தது.
அரசினது இவ்வறிவிப்பை புறந்தள்ளி வரும் காணாமல் போனோரது உறவுகள் தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப தலைவர்கள் வீடு; திரும்பவரென்ற நம்பிக்கையுடனேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கில் காணாமல் போயுள்ள தமது உறவுகளில் 40 பேரினது குடும்பங்கள் மட்டுமே  தமது உறவுகள் வீடு திரும்புவார்கள் என்பதில் நம்பிக்கையிழந்து மரண சான்றிதழை கோரியுள்ளன. 
எனினும் வன்னியில் மரண சான்றிதழ் பெற்றவர்களுள் 15 பேர் 2009 மே 19 இற்கு முன்னர் காணாமல் போனமை தொடர்பாக விண்ணப்பித்து பெற்றுள்ளனர். எனினும் இக்கால எல்லைக்கு பிற்பட்ட காலப்பகுதியில் காணாமல் போன ஜவர் தொடர்பில் மட்டும் முறைப்பாடுகள் செய்யப்பட்டு மரண சான்றிதழ் கோரி பெறப்பட்டுள்ளது. 
யாழ.குடாநாட்டில் 20 பேர் தொடர்பில்; முறைப்பாடுகள் செய்யப்பட்டு மரண சான்றிதழ் கோரி பெறப்பட்டுள்ளது.
ஆனாலும் கிழக்கில் 350 பேரது மரண சான்றிதழ்களை குடும்பத்தவர்கள் கோரி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment