Translate

Sunday 22 April 2012

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனு


போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் குறித்தான விவகாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timms அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரத்தினை எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் நாள் லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுருந்த பொதுக்கூட்டமொன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்து சர்வதேச நெருக்கடிக்கான குழுவினால் வெளியிடப்பட்ட ஆய்வற்றிகையினை மைப்படுத்தி நா.த.அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகார‌ங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் Stephen Timms அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்றினை கையளித்திருந்தார்.
இந்நிலையில் Stephen Timms அவர்கள் பிரித்தானிய பாரளுமனற்தில் இவ்விவகாரத்தை கேள்வியாக எழுப்பியுள்ளார்.
Stephen Timms : சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நீண்ட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில்; பெண்கள் அரணற்ற ஓர் அவலம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.பெண்களை பலவந்தமாய் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், பெண்களை கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கௌரவ அமைச்சர் அவர்களே! சிறிலங்கா அரசரங்கத்துடனான தங்களது பேச்சுக்களின்போது இந்த விவகாரங்கள் குறித்து எடுத்துரைப்பீர்களா ?
இதறக்கு பதிலளித்த பிரித்தானிய அரசாங்கத்தின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலர் Alistair Burt:
அது ஓர் சிறந்த அறிக்கையென நாம் கருதுகிறாம். ஏற்புடையதென நாங்கள் கருதும் விடயங்கள் பலவற்றை அது உள்ளடக்கியுள்ளதோடு, ‘கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக் குழு’ அறிக்கையில் எழுப்பப்படும் விடயங்களையும் ஒத்திருக்கிறது. எனவே இது விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடனான எமது பேச்சுக்களின் போது பேசுபொருளாக அமையும்;. ஏதிர்காலத்தில் சமாதானத்தைதுயும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் யாவும் நடந்தேறி முடிந்த அனர்த்தங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையவேண்டும் என நாம் நம்புகிறோம் – என்று கூறினார்.

No comments:

Post a Comment