Translate

Sunday, 1 April 2012

கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்


அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.

இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தியும், அதன் ஒப்புதலைப் பெற்றும் ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. அவையில் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்களித்துவிட்டு, அதே நேரத்தில் அந்தத் தீர்மானம் பலமான நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான திருத்தங்களை இந்திய அரசு செய்துள்ளது.
 

No comments:

Post a Comment