திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமன் பூஸாவுக்கு மாற்றம்.
திருகோணமலை பகுதிக்கான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதி பதுமனை திருகோணமலை தடுப்புக்காவல் சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலையின் பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவினர், இச்சந்தேக நபருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளதால் அவரை பூஸாவுக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இருப்பினும் சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி 2012ஆம் ஆண்டில் நீதிமன்றத்துக்கு கொண்டுவருமாறும் நீதவான் பணித்துள்ளார்.

No comments:
Post a Comment