ஓஸ்ரேலிய பிரஜை குணரத்தினம் ஏன் இலங்கையில் இருந்தார்? கடத்தல் மன்னன் கோத்தா கேள்வி!
ஓஸ்ரேலிய குடியுரிமை பெற்ற குணரத்தினம் எப்போது இலங்கைக்கு வந்தார் என கோதபாய ராசபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். ஓஸ்ரேலிய குடியுரிமை பெற்ற குமார் குணரத்தினத்தை கண்டு பிடித்து தருமாறு கோரிய ஒஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோதபாய இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுவரை இலங்கையில் இருப்பதாக தெரியாத ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது என கோதபாய ராசபக்ச தெரிவித்துள்ளார். முதலில் பிரேம்குமார் குணரட்ணம் என ஒருவர் இலங்கையில் இருப்பதை மறுத்தார்கள். இப்போது அத்தகைய ஒரு நபர் இங்கு தங்கியிருப்பது குறித்து பேசுகிறார்கள். அவர் ஒஸ்ரேலிய பிரஜையானால் அங்கு தங்கிருக்க வேண்டும். இலங்கையில் எப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்ட குணரத்தினத்தை தற்போது கோதபாய விசாரணைக்கு உட்படுத்தி உள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment