Translate

Monday, 9 April 2012

ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஒக்டோபர் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக 3 அறிக்கைகள்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி  யுத்தத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க  இம்மீளாய்வு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 22 ஆவது கூட்டத்தொடரின்போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தமரா குணநாயகம் கூறினார்.
யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் செல்வற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அறிக்கையில் இலங்கை மீது குறை கூறப்படும் சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக ஆராயும்  கூட்டத்தில் இலங்கை  குறித்து 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.
http://www.thinakkathir.com/?p=34165

No comments:

Post a Comment