Translate

Monday, 9 April 2012

த.தே.கூட்டமைப்புக்கு அரசுடன் ஒத்துபோகும் மனநிலை உள்ளது

நேஸ்பி பிரபு கருத்துரைப்பு

(கொழும்பு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாக வும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, நல்லபிப்பிராயம் என் பவற்றை வெளிப்படுத்துவதாகவும் பிரித்தானிய நாடாளு மன்றத்தின் இலங்கை நட்புறக்கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் சந்தித்தேன்.
யாழ்ப்பாணத்தில் சில நல்ல வேலைகள் செய்யப்ப டுவதாக அவர் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற் படுத்தப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்ற னர். அவர், 13 ஆவது திருத்தத்தை தனது இலக்காக வைத்திருப்பதாக எனக்குமிகத் தெளிவாகக் கூறினார்.சகல கட்சிகளும் 13 ஆவது திரு த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் நாடாளுமன்ற தெரிவுக்குழு தே வையற்றது என த.தே. கூட்டமைப்பு தலைவர் கருதுகின்றார்.

வடபகுதிக்கான தனது விஜயத்தை முடித் துக் கொண்ட நேஸ்பி பிரபு, அங்கு நடை பெறும் கண்ணிவெடி அகற்றும் பணிகள், மீள்குடி யேற்ற நடவடிக்கைகளை வியந்து பேசினார். இந்த செயற்பாடுகளின் கடினத்தன்மையை சர்வதேச சமூகம் அறியாதுள்ளது என அவர் கூறினார்.இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பிரச் சினைகள் குறித்து ஜனாதிபதியை தான் சந் திக்கும் போது பேசவுள்ளதாக அவர் தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை என்பவற்றின் செல்வாக் குக்கு அப்பால் த.தே.கூட்டமைப்பு இருப்பதாக நான் கருதுகின்றேன்.சனல் 4 வீடியோ குறித்து அவர் கூறும் போது, பகுதியளவில் அரசாங்கத்துக்கு சொந்த மான ஒரு தொலைக்காட்சி இவ்வாறான உண்மைக்குப் புறம்பான விடயங்களை கொண்ட ஆவணத்தை வெளியிட்டமை சரி யானது அல்ல. இலங்கையில் நடைபெறும் இலங்கை-இந்திய போட்டிகளை பி.பி.சி ஒளிபரப்புவதைத் தடுக்க சனல் 4 முயன் றமை தொடர்பான பிரச்சினையை தான் கருத்திலெடுக்கப் போவதாகவும் அவர் தெரி வித்தார்.தனது இலங்கை விஜயத்தின் போது அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன், வாசுதேவ நாணயக் கார, பசில் ராஜபக்­, கோத்தபாய ராஜபக்­, டக்ளஸ் தேவானந்தா, எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்தார்.யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாந்தோட்டை, காலி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் யாழ்.ஆயர், வடமாகாண ஆளு நர், யாழ்.கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள், வர்த்தக-கைத்தொ ழில் சம்மேளனம், பிரித் தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோரையும் சந்தித்தார்.

No comments:

Post a Comment