Translate

Monday, 9 April 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் கூடிய விரைவில் பேச்சை ஆரம்பிக்கவேண்டும் : ஐ.தே.க _


  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் விரைவாக பேச்சுக்களை நடத்தி தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பும் அரசாங்கமும் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 


அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்ல தயார் என்று அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் சியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுவருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். __

No comments:

Post a Comment