இலங்கையின் வடக்கு பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என, அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுடனான சண்டை முடிந்த பிறகும் தமிழர்கள் வசித்த பகுதியில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். சமீபத்தில் இலங்கை சென்ற பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 12 எம்.பி.,க்கள் குழு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறும் படி கோரியிருந்தனர். இதுகுறித்து, இலங்கை அதிபரின் தகவல் தொடர்பாளர் பண்டுலா ஜெயசேகரா குறிப்பிடுகையில், "புலிகளுடனான சண்டை முடிந்தாலும், ராணுவத்தினரை அங்கிருந்து வாபஸ் பெற இயலாது. வடக்கு மாகாணங்களில் தமிழர்கள் மட்டும் வசிக்கவில்லை' என்றார்.
No comments:
Post a Comment