நடுவண் அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தமிழகத்தில் விற்பனை செய்யும் புதுபிப்பு அட்டை மலையாளத்தில் அச்சிட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அண்ணா நகரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசு ஆவல் கணேசன் மற்றும் தங்கராசு ஆகியோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட நிர்வாகிகள் வாகைவேந்தன், திருமலை,பத்மநாபன், ராஜ்குமார்,தேவா மற்றும் செங்கொடி உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சி தோழர்கள் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தின் முடிவில் புதுபிப்பு அட்டைகளை தமிழில் அச்சிட்டு விற்பனை செய்யகோரி கடிதம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment