Translate

Tuesday, 3 July 2012

சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் பயணிகளால் அடித்து கொலை


சீனாவில் விமானத்தை கடத்த முற்பட்ட இருவர் சக பயணிகளாலும் விமான சிப்பந்திகளாலும் தாக்கப்பட்டு மரணமாகியுள்ளனர். காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவர்கள்மரணமாகியுள்ளனர். ஹெடியன் நகரிலிருந்து ஜின்ஜியாங் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் இவர்கள் இந்த விமானத்தை கடத்த முற்பட்டுள்ளனர்.
உய்குர் முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இவர்கள் இருவரும் 20 மற்றும் 36வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 22நிமி;ட போராட்டத்தின் பின் பயணிகள் ஆபத்தின்றி தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் சகாக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீனாவுக்கு ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் உலக உய்குர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக சீனா மீது தாம் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அமைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment