நமக்கு விருப்பமானவர்களை பார்க்கும் போது நூறாண்டுகள் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்துவோம்.
இதற்கு கவலை இல்லாத மனமும், செல்வமும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
நூறாண்டுகள் வாழ்வோருக்கும், இலையுதிர் காலத்துக்கும் சம்பந்தம் இருப்பதை அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது இலையுதிர் காலம் என கூறப்படும் செப்டம்பர்- நவம்பர் மாதங்களில் பிறந்த ஏராளமானோர் 100 ஆண்டுகள் வாழ்வதாக கூறுகிறார்கள்.
1880ஆம் ஆண்டு மற்றும் 1895ஆம் ஆண்டுகளில் பிறந்த சுமார் 1,500 பேரை கொண்டு ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த இலையுதிர் காலத்தில் நிலவும் தட்பவெட்ப நிலை, சுற்றுச்சூழல் ஆகியவை இவர்களுக்கு நல்ல பண்பு, சிறந்த மரபணு, நீண்ட வாழ்க்கை போன்ற நன்கொடையை வழங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment