Translate

Saturday, 28 July 2012

முள்ளிவாய்க்கால் அழிவில் இந்திய ஆதரவுக்கு கேரள மாபியா நாராயணனே காரணம்: விக்கிலீக்ஸ்


விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு இந்தியா ஆதரவளிக்க அன்றைய இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனே பிரதான காரணம் என்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கேரள மாபியா என்று வர்ணித்திருப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய புள்ளியாகவும் சித்தரித்துள்ளது.

சோனியா காந்தி குடும்பத்தின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய விசுவாசியான அவர்தான் இலங்கையில் நடந்த இரத்தக்களரியைத் தடுப்பதில் இந்தியாவைத் தலையிட விடாமல் தடுத்ததாக இந்தியாவிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான அவரது தீவிர எதிர்ப்புணர்வே அதற்கான பிரதான காரணம் என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment