அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் முடிவு கட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் தாக்கரே.
ஆளாளுக்கு இப்போது மன்மோகன் சிங் தலையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளனர். டைம் பத்திரிக்கை முதலில் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டது. பிறகு பாஜக விமர்சனம் செய்தது. இப்போது பிரதமரை அரசியல் ஆண்மையற்றவர் என்று வர்ணித்துள்ளார் பால் தாக்கரே.
இதுகுறித்து அவர் கூறுகையில், செயல்திறனற்றவர் என்று பிரதமரை ஒரு பத்திரிக்கை கூறியுள்ளது. அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று மக்களுக்கு விளங்கவில்லை. எனது பாஷையில் சொல்வதானால், அரசியல் ஆண்மையற்றவர் என்று சொல்லலாம்.
அதேசமயம் டைம் பத்திரிக்கை எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காரணம்,டைம் பத்திரிக்கை தனது தொழிலைச் செய்துள்ளது.
சில காலத்திற்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியர்களால் அதிகம் வெறுக்கப்படும் அரசியல்வாதி என்று இதே டைம் பத்திரிக்கைதான் வர்ணித்திருந்தது. ஆனால் அவரை வெறுத்தவர்கள், இந்துத்வாவை விரும்பாத சக்திகள் மட்டுமே.
இது நாள் வரை பிரதமர் மன்மோகன் சிங்கை உள்ளூர் பத்திரிகைகள்தான் சாடி வந்தன. தற்போது வெளிநாட்டு பத்திரிகைகளும் கூட அதைச் செய்யத் தொடங்கி விட்டன.
இந்த இக்கட்டான நேரத்தில் நல்லாட்சி புரியக் கூடிய, ஊழல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், தீவிரவாதம், பிற தேச துரோகிகள் ஆகியோருக்கு எதிராக போராடக் கூடிய, தைரியமான ஒரு தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டியது பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடமையாகும்.
இதற்கு சிவசேனாதான் இப்போதைக்கு தகுதியான ஒரே கட்சி. நாட்டில் புரட்சி வெடிக்க வேண்டும். அது டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப் புரட்சி மகாராஷ்டிராவிலிருந்து வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
No comments:
Post a Comment