ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அதற்குச் செவிசாய்க்காமல் – சிறிலங்காவில் ஊடகங்கள் தடை செய்யப்படுவது தொடர்கதையாகவே மாறிவிட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் குறைந்தது ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு சிறிலங்காவில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஊடக சுதந்திரத்துக்காக – ஜனநாயக உரிமைகளுக்காக - மனிதஉரிமைகளுக்காக குரல் எழுப்பிய பல சிங்கள, ஆங்கில இணையங்களுக்கு ஏற்கனவே சிறிலங்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் இணையங்கள் மீதும், ‘தடை‘ என்ற ‘பாசக்கயிறு‘ சிறிலங்கா அரசினால் இப்போது வீசப்பட்டுள்ளது.
ஊடகங்கள் சுதந்திரத் தன்மையுடன் செயற்படுவதை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
போருக்குப் பின்னர், சிறிலங்காவில் ‘முற்றிலும் ஜனநாயகம்‘ திரும்பி விட்டதாக கூறிக் கொள்ளப்படுகின்ற போதும் - இதுபோன்ற தடைகளின் ஊடாக ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்ற உண்மை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
சிறிலங்காவைப் பற்றிய செய்திகளை வெளியிடும் இணைய ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யப்படாத இணைய ஊடகங்களைத் தடைசெய்யும் உரிமை தமக்குள்ளதாகவும் சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் இந்தச் செயலுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
சிறிலங்காவைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதானால் பதிவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது - உலகில் வேறு எங்கும் நடக்காத ஒன்று.
இது ஊடக அடக்குமுறையை – கருத்து வெளிப்பாட்டு உரிமைகள் சிறிலங்காவில் நசுக்கப்படுவதை நியாயப்படுத்தும் கருத்தே தவிர, நியாயமான காரணம் அல்ல. விரல் நுனிக்குள் சுருங்கிப் போயுள்ள இன்றைய தகவல் உலகில் - எந்த உண்மையையும் யாராலும் மறைத்து விட முடியாது.
இந்த உண்மையை உணராமையினால் தான், சிறிலங்கா அரசு ‘ஊர் வாய்க்கு உலைமூடி‘ போடும் செயற்பாட்டை அரங்கேற்றியுள்ளது.
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட தடை செய்யப்படாத தமிழ் இணையங்களை, இப்போது சிறிலங்கா அரசு இரும்புக்கரத்தைக் கொண்டு ஒடுக்க முனைவது தமிழரின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கும், கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
இந்தச் சவாலை தமிழ் இணையங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் இணைய ஊடகங்கள் மத்தியில் நிறைந்து போயிருந்த போட்டி பல சமயங்களில் எல்லைமீறி - காட்டிக் கொடுக்கின்ற அளவுக்குக் கூடச் சென்றதுண்டு. இலக்கு இல்லாமல் இணைய ஊடகங்கள் ஒன்றையொன்று வன்மம் தீர்ப்பதும் வழக்கமாகிப் போனது.
வெவ்வேறு வடிவங்களில் தமிழ் இணைய ஊடகங்கள் இன்றும் முகமூடிகள் அணிந்த 'அண்ணை'மார்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
சிறிலங்காவில் தமிழ் இணையங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைக்கும், சிங்கள, ஆங்கில இணையங்கள் மீதான தடைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
தமிழ் இணைய ஊடகங்கள் மீதான இப்போதைய தடை, ஊடக சுதந்திரத்தை மட்டுமல்லாது தமிழரின் உரிமைக்கான குரலையும் நசுக்கும் நோக்கம் கொண்டது.
இந்த தடையின் ஊடாக, தமிழ் இணையங்கள் உண்மையை எடுத்துச் சொல்வதைத் தடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு சிறிலங்கா அரசிடம் இருக்குமேயானால் அது தவறானதாகவே அமையும்.
ஏனென்றால் இந்த ஊடகப் பெருவெளி மிகவும் விசாலமானது – விரிவானது.
புதினப்பலகை குழுமத்தினர்

No comments:
Post a Comment