உலகில் விடுதலைக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் எந்த இனத்திற்குமே போராட்டத்தில் அல்லது போராட்டப் பயணத்தில் பெறுகின்ற அனுபவங்களே மிகச்சிறந்த வழி நடத்தியாக இருக்கின்றது. பின்னர் அவையே விடுதலை வரலாறாகவும் மாற்றம் காணுகின்றது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் நாங்கள் கண்டிருக்கின்றோம். இப்போதும் காணுகின்றோம்.
எமது விடுதலைக்கான போராட்டம் கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் பிரசவித்திருந்தது முதல் எங்கள் விடுதலைப் பயணத்தில் கண்டுகொண்ட படிப்பினைகள்தான் இன்றும் தமிழர்களை கொள்கை வழியில் நிற்கச் செய்கின்றது என்பது எனது எண்ணப்பாடு. எனவே சமகால விடுதலைப் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், பின்னடைவுகள், அனைத்துமே எமக்கான படிப்பினை, அல்லது நாளைய வரலாறு.
இங்கே நாம் எதைப்பற்றி பேச நினைக்கின்றோம் என்பதை ஊகிக்க முடியாமலிருக்கலாம். அதில் தவறில்லை. அதாவது 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது, தமிழர்கள் மலைபோல் நம்பியிருந்த விடுதலைப் போராட்டம் முடிந்துபோனது என்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர்கள் ஒரு தோற்றுப்போன இனம் என்றே காட்டிக்கொள்ள நினைத்தது. அந்த உணர்வு ஆழமாக இருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஆனால் அத்தனையினையும் மறந்து மீண்டும் தமிழர்களிடம் சுதந்திர உணர்வு பிறந்திருக்கின்றது. எங்களுடைய விடுதலைக்காக நாங்களே போராடவேண்டும் என்ற துணிச்சல் வந்திருக்கின்றது.
இவற்றுக்கு மேலாக வீதியில் இறங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் நிலைக்கும் தமிழர்கள் வந்திருக்கின்றார்கள் என்றால், கடந்த 60 வருட கால போராட்டமும், உயிர் தியாகங்களும் அர்த்தமற்றவை என்று யாரும் சொல்லமுடியாது. இந்த யதார்த்தமே உலகத்திற்குச் சொல்லப்படவேண்டியிருக்கின்ற து. மறுபுறம் தமிழர்கள் சுதந்திரமாக போராடவும், தங்கள் உரிமைகளைக் கேட்கவும் கூடிய நிலை இன்று வந்திருக்கின்றது. இவ்வாறு கடந்த காலத்தில் இருந்ததில்லை என அரச தரப்பினர் வெளிப்படையாக சில இடங்களில் பேசியிருக்கின்றனர்.
ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது. தமிழர்களின் விடுதலை உணர்வு ஒரு மட்டுக்குமேல் அடங்கியிருக்காது என்பதே உண்மை. இதுபோக தமிழர்களின் விடுதலை உணர்வை எப்பாடுபட்டேனும், அடக்கி ஒடுக்கி விடவேண்டும் என்ற சிந்தனையில் சிறீலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றமை மறுபுற யதார்த்தமாகவுள்ளது. இந்நிலையில் இப்படித்தான் போகவேண்டும் என்ற நிலையிலுள்ள தமிழர்களின் சமகால விடுதலைப்போராட்டம் எதிர்வரும் காலத்தில் எப்படி அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிக்கப் போகின்றது?
நிச்சயமாக இந்தக் கேள்வியின் பின்னால் கேள்விக்குறி மட்டுமேயிருக்கின்றது. எதையும் முன்கூட்டி தீர்க்கதரிசனம் சொல்லிவிட முடியாத நிலையும் இன்றிருக்கின்றது. ஆனால் சில விடயங்களை யதார்த்தத்தோடு ஒட்டி சிந்தித்துப் பார்க்கலாம் என்பது எமது சிந்தனைவாதம். அதன்படி சில விடயங்களைப் பார்க்கலாம், உரிமைகள் குறித்து வீதியில் நின்று பேசவே முடியாத நிலை யுத்தத்தின் பின்னர் கடுமையாக்கப்பட்டிருக்கின்ற து.
இந்தநிலையில் இராணுவத்தினராலும், சிங்கள மக்களாலும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி போராட்டமொன்றை நடத்த தீர்மானித்திருந்தது. அந்தப் போராட்டம் வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற கேள்விகள் மறுபுற
மிருக்கட்டும். ஆனால் இந்த முன்னெடுப்புக்கள் எமக்கு வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. அல்லது புது வேகத்தைக் கொடுத்திருக்கின்றது. வடக்கில் எந்தவொரு மாவட்டமும் மிச்சமில்லாமல் அனைத்துப் பிரதேசங்களிலும், சிங்களக் குடியேற்றங்களும், இராணுவத்தினரால் எழுந்தமானமாக நிலங்கள் கையகப்படுத்துவதுமாக சம்பவங்கள் தினசரி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.
இவை ஒரு வரம்பு நிலையில் நிறுத்தப்படாவிட்டால், அல்லது இவை நிறுத்தப்படுவதற்கான போராட்டத்தை நடத்தாவிட்டால் நிச்சயமாக இந்த ஆக்கிரமிப்பின் அகலக்கால் தமிழர் தாயகம் முழுவதும் பரந்துபட்டுவிடும், தமிழர்கள் வந்தேறுகுடிகளாக துரத்தப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்தவொரு விடயம். ஆனால் இவற்றுக்கெதிராக மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் கூட சில சமயங்களில் வாய்திறக்க முடியவில்லை.
இதனை சில ஊடகங்கள் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுமுள்ளன. காரணம் இராணுவத்தினதும், இராணுவப் புலனாய்வாளர்களினதும் அத்துமீறல்களும், அச்சுறுத்தல்களும் அந்தளவிற்கு இருந்தது. இந்த நிலையிலும் மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கத் தயாரானார்கள், அதனை தலைமைதாங்கி நடத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தயாரானது என்பது தமிழர்களுக்கான வெற்றி என்று கொள்ளலாம்.
அதுபோக மறுநாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தெல்லிப்பளையில் இடம்பெற்றிருந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் போராட்டத்தை நடத்தவிடாது செய்துவிட பல வழிகளில் இராணுவமும், காவல்துறையினரும் முயன்றிருந்தும், இறுதியில் மக்கள் சக்தி வென்றது. எப்படி யாழில் நடைபெறவிருந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுத்தனரோ, அவ்வாறு தடுக்க முடியாத நிலையில் மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இவை அனைத்துமே மக்களை எதிர்வரும் காலத்தில் போராட்டங்களில் கலந்துகொள்ள விடாது செய்வதற்கு மட்டுமே என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி முறிகண்டி ஆர்பாட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளத்தான் போகின்றார்கள். எனவே விடுதலைக்காகப் போராட மக்கள் தயாரகவேயுள்ளனர். அவர்களை கொள்கை வழியில் கொண்டுசெல்ல நல்ல தலைமைகள்தான் தேவை.
இந்தப் போராட்த்தில் இன்னொரு நன்மையும் நடந்தது. அதாவது போராட்டத்தில் வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து கொண்டன. இது காலத்தின் வரலாற்றின் தேவை என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இந்த ஒற்றுமையினை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு மக்களின் பெயரால் பேசும் வல்லமை பெற்ற புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.
இவை எல்லாமும் ஒரு புறமிருக்க, யாழ்.நகரில் இடம்பெற்ற போராட்டத்தை அரசு சட்டத்தை கொண்டு தடுத்திருக்கின்றது. இதன் மூலம் சட்டம் தமிழர்களுக்கானது இல்லை, சட்டத்தை காப்பாற்றுகின்றவர்கள் தமிழர்களுக்காக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும், விடுதலைப் போராட்டம் ஆரம்பமானபோது இதே காவல்துறையினர் செய்த பொறுக்கித்தனத்தில் மாற்றமில்லாமல் இன்றும் அதையே செய்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோக சட்டத்தை நெறிமுறைப்படுத்துகின்ற ஒரு நீதிபதி, தன்னுடைய குடும்பத்திற்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நீங்கள்தான் காரணம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரை காட்டிக் கூறியிருக்கின்றார். தன்னுடைய குடும்பத்தையும், தன்னையும் பார்த்துக் கொள்ளும் நீதிபதி சொந்த மண்ணுக்குச் செல்லாமல் வீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து சிந்திக்கவேயில்லை. எனவே படிப்பினைகளை சரியான முறையில் எடுத்துக்கொண்டு எமது சமகால விடுதலைப் போராட்டம் பயணிக்கவேண்டும்.
அதுவே ஈற்றில் நிலையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் எல்லோரையும்போல் எமக்கும் ஒரு நம்பிக்கையிருக்கின்றது. அதை வேற்றுமைகள் கடந்த போராட்டப்பயணத்தில்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நாம் நம்புவோம்.
நன்றி : ஈழமுரசு
எமது விடுதலைக்கான போராட்டம் கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் பிரசவித்திருந்தது முதல் எங்கள் விடுதலைப் பயணத்தில் கண்டுகொண்ட படிப்பினைகள்தான் இன்றும் தமிழர்களை கொள்கை வழியில் நிற்கச் செய்கின்றது என்பது எனது எண்ணப்பாடு. எனவே சமகால விடுதலைப் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், பின்னடைவுகள், அனைத்துமே எமக்கான படிப்பினை, அல்லது நாளைய வரலாறு.
இங்கே நாம் எதைப்பற்றி பேச நினைக்கின்றோம் என்பதை ஊகிக்க முடியாமலிருக்கலாம். அதில் தவறில்லை. அதாவது 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது, தமிழர்கள் மலைபோல் நம்பியிருந்த விடுதலைப் போராட்டம் முடிந்துபோனது என்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர்கள் ஒரு தோற்றுப்போன இனம் என்றே காட்டிக்கொள்ள நினைத்தது. அந்த உணர்வு ஆழமாக இருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஆனால் அத்தனையினையும் மறந்து மீண்டும் தமிழர்களிடம் சுதந்திர உணர்வு பிறந்திருக்கின்றது. எங்களுடைய விடுதலைக்காக நாங்களே போராடவேண்டும் என்ற துணிச்சல் வந்திருக்கின்றது.
இவற்றுக்கு மேலாக வீதியில் இறங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் நிலைக்கும் தமிழர்கள் வந்திருக்கின்றார்கள் என்றால், கடந்த 60 வருட கால போராட்டமும், உயிர் தியாகங்களும் அர்த்தமற்றவை என்று யாரும் சொல்லமுடியாது. இந்த யதார்த்தமே உலகத்திற்குச் சொல்லப்படவேண்டியிருக்கின்ற
ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது. தமிழர்களின் விடுதலை உணர்வு ஒரு மட்டுக்குமேல் அடங்கியிருக்காது என்பதே உண்மை. இதுபோக தமிழர்களின் விடுதலை உணர்வை எப்பாடுபட்டேனும், அடக்கி ஒடுக்கி விடவேண்டும் என்ற சிந்தனையில் சிறீலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றமை மறுபுற யதார்த்தமாகவுள்ளது. இந்நிலையில் இப்படித்தான் போகவேண்டும் என்ற நிலையிலுள்ள தமிழர்களின் சமகால விடுதலைப்போராட்டம் எதிர்வரும் காலத்தில் எப்படி அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிக்கப் போகின்றது?
நிச்சயமாக இந்தக் கேள்வியின் பின்னால் கேள்விக்குறி மட்டுமேயிருக்கின்றது. எதையும் முன்கூட்டி தீர்க்கதரிசனம் சொல்லிவிட முடியாத நிலையும் இன்றிருக்கின்றது. ஆனால் சில விடயங்களை யதார்த்தத்தோடு ஒட்டி சிந்தித்துப் பார்க்கலாம் என்பது எமது சிந்தனைவாதம். அதன்படி சில விடயங்களைப் பார்க்கலாம், உரிமைகள் குறித்து வீதியில் நின்று பேசவே முடியாத நிலை யுத்தத்தின் பின்னர் கடுமையாக்கப்பட்டிருக்கின்ற
இந்தநிலையில் இராணுவத்தினராலும், சிங்கள மக்களாலும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி போராட்டமொன்றை நடத்த தீர்மானித்திருந்தது. அந்தப் போராட்டம் வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற கேள்விகள் மறுபுற
மிருக்கட்டும். ஆனால் இந்த முன்னெடுப்புக்கள் எமக்கு வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. அல்லது புது வேகத்தைக் கொடுத்திருக்கின்றது. வடக்கில் எந்தவொரு மாவட்டமும் மிச்சமில்லாமல் அனைத்துப் பிரதேசங்களிலும், சிங்களக் குடியேற்றங்களும், இராணுவத்தினரால் எழுந்தமானமாக நிலங்கள் கையகப்படுத்துவதுமாக சம்பவங்கள் தினசரி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.
இவை ஒரு வரம்பு நிலையில் நிறுத்தப்படாவிட்டால், அல்லது இவை நிறுத்தப்படுவதற்கான போராட்டத்தை நடத்தாவிட்டால் நிச்சயமாக இந்த ஆக்கிரமிப்பின் அகலக்கால் தமிழர் தாயகம் முழுவதும் பரந்துபட்டுவிடும், தமிழர்கள் வந்தேறுகுடிகளாக துரத்தப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்தவொரு விடயம். ஆனால் இவற்றுக்கெதிராக மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் கூட சில சமயங்களில் வாய்திறக்க முடியவில்லை.
இதனை சில ஊடகங்கள் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுமுள்ளன. காரணம் இராணுவத்தினதும், இராணுவப் புலனாய்வாளர்களினதும் அத்துமீறல்களும், அச்சுறுத்தல்களும் அந்தளவிற்கு இருந்தது. இந்த நிலையிலும் மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கத் தயாரானார்கள், அதனை தலைமைதாங்கி நடத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தயாரானது என்பது தமிழர்களுக்கான வெற்றி என்று கொள்ளலாம்.
அதுபோக மறுநாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தெல்லிப்பளையில் இடம்பெற்றிருந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் போராட்டத்தை நடத்தவிடாது செய்துவிட பல வழிகளில் இராணுவமும், காவல்துறையினரும் முயன்றிருந்தும், இறுதியில் மக்கள் சக்தி வென்றது. எப்படி யாழில் நடைபெறவிருந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுத்தனரோ, அவ்வாறு தடுக்க முடியாத நிலையில் மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இவை அனைத்துமே மக்களை எதிர்வரும் காலத்தில் போராட்டங்களில் கலந்துகொள்ள விடாது செய்வதற்கு மட்டுமே என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி முறிகண்டி ஆர்பாட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளத்தான் போகின்றார்கள். எனவே விடுதலைக்காகப் போராட மக்கள் தயாரகவேயுள்ளனர். அவர்களை கொள்கை வழியில் கொண்டுசெல்ல நல்ல தலைமைகள்தான் தேவை.
இந்தப் போராட்த்தில் இன்னொரு நன்மையும் நடந்தது. அதாவது போராட்டத்தில் வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து கொண்டன. இது காலத்தின் வரலாற்றின் தேவை என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இந்த ஒற்றுமையினை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு மக்களின் பெயரால் பேசும் வல்லமை பெற்ற புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.
இவை எல்லாமும் ஒரு புறமிருக்க, யாழ்.நகரில் இடம்பெற்ற போராட்டத்தை அரசு சட்டத்தை கொண்டு தடுத்திருக்கின்றது. இதன் மூலம் சட்டம் தமிழர்களுக்கானது இல்லை, சட்டத்தை காப்பாற்றுகின்றவர்கள் தமிழர்களுக்காக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும், விடுதலைப் போராட்டம் ஆரம்பமானபோது இதே காவல்துறையினர் செய்த பொறுக்கித்தனத்தில் மாற்றமில்லாமல் இன்றும் அதையே செய்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோக சட்டத்தை நெறிமுறைப்படுத்துகின்ற ஒரு நீதிபதி, தன்னுடைய குடும்பத்திற்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நீங்கள்தான் காரணம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரை காட்டிக் கூறியிருக்கின்றார். தன்னுடைய குடும்பத்தையும், தன்னையும் பார்த்துக் கொள்ளும் நீதிபதி சொந்த மண்ணுக்குச் செல்லாமல் வீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து சிந்திக்கவேயில்லை. எனவே படிப்பினைகளை சரியான முறையில் எடுத்துக்கொண்டு எமது சமகால விடுதலைப் போராட்டம் பயணிக்கவேண்டும்.
அதுவே ஈற்றில் நிலையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் எல்லோரையும்போல் எமக்கும் ஒரு நம்பிக்கையிருக்கின்றது. அதை வேற்றுமைகள் கடந்த போராட்டப்பயணத்தில்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நாம் நம்புவோம்.
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment