Translate

Friday 20 July 2012

தென்னங் குரும்பையால் ஓட்டை உடைக்கும் புது முறை: அறிமுகப்படுத்திய புலனாய்வுப்பிரிவினர் !

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடியில் த.தே.மக்கள் முன்னணி ஒரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதனை தடுக்குமுகமாக பருத்தித்துறை நீதிமன்றில் பொலிசார் வழக்கு பதிவுசெய்தனர். அதாவது நடக்கவிருக்கும் ஆர்பாட்டத்தை தடைசெய்யவேண்டும் என அவர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை இதனை அறிந்த சில சட்டத்தரணிகள் உடனடியாகச் செயல்பட்டு, பொலிசார் முன்வைத்த விவாதங்களுக்கு, தகுந்த பதிலடிகொடுத்தனர். மக்கள் போராட்டம் நடத்த உரிமை உண்டு என அவர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பருத்தித்துறை நீதிவான் சிறிநிதி நந்தசேகரன், த.தே.மக்கள் முன்னணி ஆர்பாட்டத்தை நடத்தலாம் எனத் தீர்பளித்தார். அதுமட்டுமல்லாது, இதற்கு தகுந்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


கிணறு வெட்டச் சென்று பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது பொலிசாரின் நிலை. எப்படியாவது நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு வாங்கலாம் என்று சென்றவர்களுக்கு நீங்களே பாதுகாப்பையும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும். வெந்து நூலாகிச் சென்ற பொலிசார், நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு பாதுகாப்பைக் கொடுக்க நேர்ந்தது. ஆனால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் புலிக்கொடியைக் காட்டிச் சென்ற விடையங்களைப் பற்றி நாம் இங்கே தெரிவிக்கவேண்டிய அவசியமே இல்லை ! அது ஒரு புறம் இருக்கட்டும்.

புதன்கிழமை இரவு நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் வீட்டு கூரை மீது சிலர் சரமாரியாக தென்னங் குரும்பைகளை வீசியுள்ளனர். கல்லை விடப் பாரமான, இந்த தென்னங் குரும்பைகளை வீசி அவர் வீட்டின் கூரை ஓடுகளை உடைத்துள்ளனர். போதாக்குறைக்கு கண்ணாடிகள் மீது இதனை வீசி உடைத்துள்ளனர். அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தைக் கூட கணக்கில் எடுக்காமல் இதனை எவரால் செய்யமுடியும் ? இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரே நீதிபதியை வெருட்ட, இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளனர். யாழில் தென்னங் குரும்பையைப் பாவித்து கூரையில் உள்ள ஓடுகளை எவ்வாறு உடைப்பது என்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது செயல்முறைப் பயிற்சிகள் எடுத்துவருகிறார்கள் போல...

No comments:

Post a Comment