இந்தியாவின் தற்போதைய நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியாகவே அணுக வேண்டும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தியத்தலாவயில் சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்த 140 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
”விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்டப் போரை வடக்கு, கிழக்கில் முன்னெடுத்த போது, போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு வெளிநாடுகள் பல அழுத்தம் கொடுத்தன.
ஆனால், இந்தியா அவ்வாறு அழுத்தம் கொடுக்காமல், மிகவும் அமைதியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்கியது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment