Translate

Tuesday, 3 July 2012

இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது! சிறிதுங்க ஜயசூரிய


இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது! சிறிதுங்க ஜயசூரிய
சிங்கத்துடன் விளையாடப் போய் தனது உயிரை நரி பறி கொடுத்த கதை போலத்தான் இந்தியாவுடன் இலங்கை விளையாடி வருவது நல்லதல்ல. இந்தியாவின் பிடிக்குள் இலங்கை அரசு வெகுவிரைவில் சிக்கப்போகின்றது என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்திய அரசை இலங்கை அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. தற்போதும் ஏமாற்றி வருகின்றது.
13 பிளஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய விடயங்களில் இந்தியாவை ஆசியாவின் அதிசய நாடான இலங்கை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
இந்தியாவைச் சமாளிப்பதற்கு தற்போது வட மாகாணசபைத் தேர்தல் என்ற கதையை இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இலங்கை அரசு எவரிடம் சொன்னாலும், இல்லாவிட்டாலும் வட மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. இலங்கை அரசு இதைச் செய்தேயாக வேண்டும்.
தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசு இந்தியாதான். எனவே, அந்நாட்டைத் தொடர்ந்தும் ஏமாற்றமுடியாது என்ற உண்மையை இங்குள்ள ஆட்சியாளர்கள் விரைவில் புரிந்துகொள்வர். இந்தியாவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்துடன் விளையாடப்போய் நரி தனது உயிரைப் பறி கொடுத்த கதை போல்தான் இந்தியாவிடம் போலி வாக்குறுதிகளை வழங்கி அதாவது, இந்தியா சொல்வதையும், இந்தியா சொல்லாததையும் செய்வோம் எனக்கூறி இலங்கை வசமாக மாட்டிக்கொள்ளப் போகின்றது.
இவ்வாறு ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment