Translate

Tuesday, 3 July 2012

சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னரான நிலைமை தொடர்பான கூட்டத்திற்கு தமிழ் எம்பிகள், செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு


வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னரான நிலைமையை பற்றி ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள செயல்பாட்டாளர்களினதும் அவசர சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அனைத்து தமிழ் எம்பீகளையும், மக்கள் பிரதிநிதிகளையும்இ கட்சிகளின் பிரதிநிதிகளையும், சிவில் சமூக செயல்பாட்டாளர்களையும் இந்த சந்திப்பில் தவறாமல் கொள்ளும்படி மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் மனோ கணேசனும், இணைத்தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஐ.தே.கவின் துணை செயலாளர் மற்றும் கட்சியின் மனித உரிமை பொறுப்பாளர் ஜெயலத் ஜெயவர்த்தன எம்பியும் விடுத்துள்ள கூட்டு அழைப்பில் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment